Categories
அரசியல்

அமைச்சராகி 30 நிமிஷம் ஆகல…! அதுக்குள்ளே இப்படியா ? தர்ம சங்கடத்தில் DMK தலைமை …!!

திமுகவின் இளைஞர் அணி செயலாளரும் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் இன்று அமைச்சராக பதவி ஏற்றார். கடந்த சில நாட்களாகவே உதயநிதி அமைச்சராக பொறுப்பேற்பார் என்று எதிர்க்கட்சிகளால் விமர்சிக்கப்பட்ட நிலையில், திமுகவினர் இதை ஆதரித்து, தொடர்ந்து கருத்துக்களை தெரிவித்து வந்த நிலையில்,

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என் ரவி உதயநிதிக்கு அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதனை கொண்டாடும் வகையில் தமிழகம் முழுவதும் நிர்வாகிகள் பட்டாசு வெடித்து,  இனிப்பு வழங்கி வரும் நிலையில்,  திமுகவினரை அதிர்ச்சி அடைய வைக்கும் வகையில் இந்தநிகழ்வை எதிர்க்கட்சியினர் மாற்றியுள்ளனர்.

உதயநிதி அமைச்சராக பொறுப்பேற்று 30 நிமிடம் கூட ஆகாத நிலையில் உதயநிதி பதவி ஏற்பதை குறிப்பிட்டு,  ட்விட்டரில் #சின்னதத்தி_எனும்_நான் என்ற ஹேஷ்டாக்கில் பிஜேபி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இந்த ஹாஷ்டாக் தற்போது இந்திய அளவில் தற்போது முதல் இடத்தில் இருந்து வருவது ஆளுங்கட்சி திமுகவினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

 

Categories

Tech |