Categories
இந்திய சினிமா சினிமா

யாரும் அப்படி நினைக்காதீங்க!…. நீங்களாக இருங்கள்!….. ஓபனாக பேசிய நடிகை வித்யா பாலன்….!!!

இந்தி சினிமாவில் முன்னணி ஹீரோயினியாக வலம் வருபவர் வித்யாபாலன். இவர் மறைந்த கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதா வேடத்தில் நடித்து தேசியவிருது பெற்றார். மேலும் தமிழில் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் உடல் எடையானது அதிகமானதால் தான் எதிர்கொண்ட சிரமங்கள் பற்றி வித்யாபாலன் பேட்டி அளித்தார். அதாவது “சிறு வயது முதல் நான் குண்டாக இருந்ததால் திரைத் துறைக்கு வந்ததும் அனைவரும் என்னை பார்த்து கிண்டல் செய்தனர். இதன் காரணமாக என் உடலை நானே வெறுக்க ஆரம்பித்தேன்.

இதற்கிடையில் விபரீதமான கோபம், இனம்புரியாத மன உளைச்சல் எனக்கு வந்தது. அதன்பின் என் உடம்புக்கு என்ன குறை இருக்கிறது என்று எனக்குள் தோன்றியது. அதனை தொடர்ந்து நான் யார் என்ன பேசினாலும் கண்டுகொள்வதை விட்டு விட்டேன். அத்துடன் எனது உடல் குண்டாக இருக்கிறதா, ஒல்லியாக உள்ளதா என நினைக்காமல் ஆரோக்கியமாக இருக்கிறதா என்று மட்டும் தான் யோசிக்க ஆரம்பித்தேன். தற்போது நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஆகவே அடுத்தவர்களுக்காக மாறவேண்டும் என யாரும் நினைக்காதீர்கள்” என்று அவர் கூறினார்.

Categories

Tech |