Categories
பல்சுவை

யுபிஐ பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு…. இனி ஒரு நாளைக்கு இவ்வளவுதான் பணம் அனுப்ப முடியும்…. உடனே பாருங்க….!!!!

கூகுள் பே, போன் பே மற்றும் அமேசான் பே உள்ளிட்ட யுபிஐ செயலிகள் தினம் தோறும் எவ்வளவு பணம் மாற்றம் செய்யலாம் என்ற வரம்பு குறித்த தகவலை NPCI வெளியிட்டுள்ளது. அதன்படி அமேசான் ஒரு நாளை ஒரு லட்சம் வரை பணம் பரிமாற்றம் செய்யலாம். ஆனால் அமேசான் பே-ல் இணைந்தவுடன் முதல் 24 மணி நேரத்திற்கு அதிகபட்சமாக 5 ஆயிரம் ரூபாய் மட்டுமே அனுப்ப முடியும். கூகுள் பே செயலிலும் ஒரு லட்சம் ரூபாய் வரை பணம் பரிமாற்றம் செய்யலாம் எனவும் ஆனால் ஒரு நாளை 10 முறைக்கு மேல் கூகுள் பே-ல் பணம் பரிமாற்றம் செய்ய முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேடி எம் செயலியில் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை பண பரிவர்த்தனை செய்யலாம் எனவும் ஒரு மணி நேரத்தில் 20 ஆயிரம் ரூபாய் வரை பரிமாற்றம் செய்ய முடியும் எனவும் ஒரு மணி நேரத்தில் ஐந்து முறை மட்டுமே, ஒரு நாளைக்கு 20 முறை பணப்பரிமாற்றம் செய்ய முடியும். போன் பே செயலி மூலமாகவும் நீங்கள் ஒரு லட்சம் ரூபாய் வரை பணம் பரிமாற்றம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |