தமிழக அரசியலில் தற்போது புதுப்புது மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. ஏற்கனவே அதிமுக இரண்டாக பிரிந்துள்ள நிலையில் தற்போது நான்காக சிதறி கிடக்கின்றது. அதாவது எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஒரு அணியும், ஓபிஎஸ் தலைமையில் ஒரு அணியும், டிடிவி தினகரன் தலைமையில் ஒரு அணியும், சசிகலா தலைமையில் ஒரு அணியும் என இருந்து வருகின்றது. அது மட்டுமல்லாமல் அதிமுகவில் இருக்கும் முக்கிய புள்ளிகளும் தற்போது திமுக பக்கம் தாவி வருகின்றன.
இந்நிலையில் ஓபிஎஸ் அணியில் இருக்கும் மூன்று மாவட்டச் செயலாளர்கள் தங்களது ஆதரவாளர்கள் 3000 பேருடன் திமுகவில் இணைய உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. ஓபிஎஸ் அணையில் இருந்த கோவை செல்வராஜ் சமீபத்தில் முதல்வர் ஸ்டாலினின் திமுகவில் இணைந்தார். இதனை தொடர்ந்து மூன்று மாவட்ட செயலாளர்கள் திமுகவில் இணைய உள்ளனர். இதனால் ஓபிஎஸ் கூடாத மொத்தமாக காலியாகும் சூழல் உருவாகியுள்ளது.