தெற்கு ரயில்வே அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
தெற்கு ரயில்வே அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “நாங்கள் பயணிகளின் வசதிக்காக தினம்தோறும் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். இந்நிலையில் வழக்கமாக சிறிது தூரம் வரை பயணிப்பவர்கள் சாதாரண டிக்கெட் எடுத்து பயணம் செய்வார்கள். இந்த பெட்டியில் கூட்டம் அதிகமாகவே இருக்கும் . இதனால் பெண்கள், குழந்தைகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இந்த பிரச்சினையை தீர்க்க புதிதாக ஒரு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு ரயிலிலும் டிரிசர்வ்டு பெட்டிகள் இணைக்கப்படுகிறது. தற்போது தமிழ்நாட்டில் இருந்து கேரளா செல்லும் 24 விரைவு ரயில்களில் இந்த பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் எழும்பூர்-கொல்லம் ரயில்களில் திருநெல்வேலி வரை எஸ் 11,12 பெட்டிகளும், எழும்பூர்- ராமேஸ்வரம் விரைவு ரயிலில் மானாமதுரை வரை எஸ் 12, 13, பெட்டிகளும், மங்களூர் விரைவு ரயிலில் திருச்சி வரை எஸ் 7,8,9,10 பெட்டிகளும், தூத்துக்குடி-மைசூர் விரைவு ரயிலில் மதுரை எஸ் 10, 11, 12,13 பெட்டிகளும், கன்னியாகுமரி-பெங்களூரு ரயிலில் எர்ணாகுளம் வரை எஸ் 6,7 பெட்டிகளும், நாகர்கோவில் விரைவு ரயிலில் திருநெல்வேலி வரை எஸ் 11,12 பெட்டிகளும் டிரிசர்வ்டு பெட்டிகளாக இருக்கும். இதற்கு கூடுதலாக 20 ரூபாய் செலுத்த வேண்டும்” என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.