Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

கோடை காலத்தில் சரும அழகை பாதுகாக்கும் இயற்கை குளியல் பொடி!

முகத்தையும், சருமத்தையும் பேணி பாதுகாக்க இயற்கை மூலிகைகள் நம்மிடையே நிறைந்து கிடக்கின்றன. சோப்பு, பவுடர், கிரீம் போன்றவற்றை தூரமாக வைத்துவிட்டு இயற்கையில் கிடைக்கும் பொருட்களை கொண்டு குளியல் பொடி தயாரித்து பயன்படுத்துங்கள்.

தேவையான பொருள்கள் :

சோம்பு – 100கி,
கஸ்தூரி மஞ்சள் – 50கி,
வெட்டிவேர் – 200கி,
அகில் கட்டை – 200கி,
சந்தனத்தூள் – 300கி,
கார்போக அரிசி – 200 கி,
தும்மராஷ்டம் – 200கி,
எலுமிச்சை – 200கி,
கோரைக்கிழங்கு – 200கி,
கோஷ்டம் – 200கி,
ஏலரிசி – 200கி,
பாசிப்பயிறு – அரை கிலோ,
மகிழம் பூ பொடி – 200கி.

மேலே கூறப்பட்டுள்ள அனைத்து பொருட்களும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கிறது. இவைகளை வாங்கி தனித்தனியாக காயவைத்து அரைத்து காற்று புகாத டப்பாவில் சேமித்து வைத்து கொள்ளவும். பின் தினமும் குளிக்கும்போது, தேவையான அளவு எடுத்து நீரில் குளித்து வந்தால் உங்கள் சருமம் எவ்வித பிரச்சனைகள் இன்றி அழகாக இருக்கும்.

Categories

Tech |