Categories
தேசிய செய்திகள்

BIG ALERT: PF வைத்திருப்பவர்களுக்கு எச்சரிக்கை…. இதை மட்டும் செஞ்சிராதீங்க…!!!

EPFO அமைப்பானது ஊழியர்களுடைய பணிக்காலம் முடிந்த பிறகு அவர்களுடைய பணிக்காலத்தில் ஊதியத்திற்கு ஏற்ற ஓய்வூதியத்தை கொடுக்கிறது. ஊழியர்கள் தங்களுடைய சம்பளத்திலிருந்து 12 சதவீதமும், அதே அளவிற்கு ஊழியர் பணியாற்றும் நிறுவனமும் ஊழியரின் கணக்கில் தொகையை செலுத்த வேண்டும். இந்த பிஎஃப் பணத்திற்கு வருடத்திற்கு குறிப்பிட்ட சதவீதம் வட்டியும் கொடுக்கப்படுகிறது. வருங்கால வைப்பு நிதியின் கீழ் ஊழியருக்கு அதிகபட்சமாக ஓய்வூதியமாக 15000 கொடுக்கப்படுகிறது.

இந்த நிலையில் EPFO மூலம் PF பிடிக்கப்படும் ஊ ஊழியர்களுக்கு முக்கிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சமீப நாட்களாக EPFOவில் இருந்து தொடர்பு கொள்வதாக கூறி, ஊழியர்களின் ஆதார் எண், பான் எண், வங்கி எண், ஓடிபி, UAN எண் போன்ற விபரங்களை கேட்டு மோசடி நடைபெற்று வருகிறது. EPFO ஒருபோதும் இதுபோன்ற தகவல்களை கேட்காது. மக்களே ஏமாற வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கு பகிரலாமே!

Categories

Tech |