மார்க் ஆண்டனி திரைப்படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷால். விஷாலின் 33-வது திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ளார். இந்த படத்திற்கு மார்க் ஆண்டனி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. மேலும் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக மிரட்டுகின்றார். இந்த படத்தை மினி ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கின்றது.
தமிழில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த ரித்து வர்மா இத்திரைப்படத்தில் நாயகியாக நடிக்கின்றார். இந்நிலையில் இத்திரைப்படம் குறித்து புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அண்மையில் விஷால் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது, எஸ்.ஜே.சூர்யா மூணு பேஜ் டயலாக்கை ஒரே சாட்டில் என் முன்னாடி பேசுவார். நான் என்னை மறந்து அவரை பார்த்துக் கொண்டிருப்பேன்.
இத்திரைப்படம் பீரியட் பிலிம் என்பதால் படத்தில் மூன்று விஷால், இரண்டு எஸ் ஜே சூர்யா கதாபாத்திரம் அமைந்திருக்கும். ஆதி ரவிச்சந்திரன் எப்படிப்பட்ட இயக்குனர் என்பதை திரைப்படத்தின் மூலம் மக்களுக்கு தெரியும். அவர் படத்தை அருமையாக இயக்கி இருக்கின்றார் என தெரிவித்துள்ளார்.