Categories
அரசியல் மாநில செய்திகள்

P.M தேர்தல் வரட்டும்…! DMKவுக்கு ஆப்பு உறுதி… நம்பிக்கையோடு டிடிவி …!!

செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், பாண்டிச்சேரி என்பது பல்லாயிரம் கோடி கிலோ மீட்டர் அந்த பக்கம் இல்ல, பக்கத்தில் இருக்கின்ற மாநிலம். இங்கே நடப்பது எல்லாம் தெரியும். அதனால் அங்கு விடியல் ஆட்சிக்கு வாய்ப்பு இல்லை என்று தான் நினைக்கிறேன். தமிழ்நாட்டு மக்கள் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் திமுகவிற்கு எதிர்ப்பான நிலைப்பாட்டை எடுப்பார்கள், அது தேர்தல் முடிவில் தெரியும்.

அம்மாவின் தொண்டர்களுக்கு நான் சொல்வது…  அம்மாவின் தொண்டர்கள் அனைவரும் ஓரணியில் திரண்டு திமுக என்கிற தீய சக்தியை புரட்சித்தலைவரும், அம்மாவும் தங்கள் வாழ்நாள் முழுவதும் எதிர்த்த திமுகவை வீழ்த்த…. அம்மாவின் தொண்டர்கள் அவர்கள் எங்கே இருந்தாலும் உண்மையான தொண்டர்களாக தங்களை கருதுபவர்களுக்கு தான் நான் சொல்கிறேன்…  அவர்கள் ஓர் அணியில் இணைந்து,  வருங்காலத்தில் நாம் செயல்பட்டால் தான் தேர்தலிலே திமுகவை வீழ்த்த முடியும் என்பதை இந்த நேரத்தில் அவர்களுக்கு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

நான் சொன்னது அம்மாவின் தொண்டர்கள் எங்கே இருந்தாலும் அவர்கள் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும்… அதில் எடப்பாடி பழனிச்சாமி அம்மாவின் உண்மையான தொண்டர் இல்லை என்பது அவர் தொடர்ந்து நிரூபித்துக் கொண்டு வருகிறார். ஆனால் நான் சொல்வது அம்மாவின் தொண்டர்கள் உண்மையான தொண்டர்களாக தங்களை கருத்துபவர்கள் ஒற்றுமையாக இருந்து செயல்பட்டால் தான் திமுகவை வீழ்த்த முடியும் என்ற எதார்த்த உண்மையை உணர்ந்து அனைவரும் ஒருங்கிணைந்து ஓரணியில் திரண்டு பல கட்சியாக இருக்கலாம்…

ஆனால் ஓர் அணியில் திரண்டு,  திமுகவை வீழ்த்த மனதிலே அந்த எண்ணத்தோடு இருந்து திமுகவை வீழ்த்த வேண்டும் என்று தேர்தலில் நம்மோடு கூட்டணி வைக்கின்ற கட்சிகளோடு சேர்ந்து நாம் போரிட்டால் தான் வெற்றி பெற முடியும் என்று திரும்ப திரும்ப சொல்கிறேன்.

Categories

Tech |