தமிழ்நாடு அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “கடந்த சில நாட்களுக்கு முன்பு பருவநிலை மாற்ற இயக்கத்தை நமது முதலமைச்சர் தொடங்கி வைத்தார். இந்நிலையில் பருவநிலை மாற்றமானது இயற்கைச் சூழல், மனித உயிர்கள், பொருளாதார வளம் போன்றவற்றின் மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும். இந்நிலையில் தெளிவான தொலைநோக்கு, சிறந்த தலைமை, நல்ல புரிதல் போன்றவை இருந்தால் மட்டும் தான் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள முடியும். இதற்காக தான் இந்த இயக்கம் அமைக்கப்பட்டுள்ளது. நமது தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி முகமைகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் ஆகியவை பருவநிலை மாற்றம், பேரிடர் தணிப்பு போ\ன்ற பிரிவுகளில் பணியாற்றி வருகின்றது.
மேலும் பல்வேறு விதமான பருவநிலை மாற்ற பிரச்சனைகள், கடல் நீர்மட்டம் உயர்வது போன்றவற்றுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் நமது மாநிலத்தில் அடுத்த 10 ஆண்டுகளில் மரங்களின் அளவை 33 சதவீதமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக தமிழ்நாடு ஈர நிலங்கள் இயக்கம் உருவாக்கப்படும். இதனுடன் பருவநிலை மாறுபாடு இயக்கம் இணைந்து பணியாற்றும். மேலும் பருவநிலை மாறுபாடு பிரச்சனையை எதிர்கொள்ள நவீன தொழில்நுட்பங்கள் ஆராயப்படும். கல்வி நிறுவனங்கள் மற்றும் பங்குதாரர்களுடன் பருவநிலை மாற்ற இயக்கம் தொடர்ந்து பணியாற்றும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.