தமிழ் தொலைக்காட்சிகளில் விஜேவாக அறிமுகமான சித்ரா அதன்பின் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். இவர் கடைசியாக பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடிக்க அந்த கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் ரீச் ஆனது. சீரியலில் பிஸியான நடிகையாக இருந்த போதே ஹேமந்த் என்பவரை காதலித்து சித்ரா திருமணம் செய்து கொள்ள இருந்தார். ஆனால் நடிகை சித்ரா திடீரென இறந்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் நடிகை சித்ரா இறந்து 2 வருடங்களாகும் நிலையில், நடிகை சரண்யா அவரைப் பற்றிய ஒரு முக்கிய தகவலை கூறியுள்ளார். அவர் கூறியதாவது, சித்ராவின் மரணம் தொடர்பான விசாரணை நடந்து வருவதால் நான் பல விஷயங்களை கூறக்கூடாது.
சித்ராவின் மரணத்தால் நான் மன அழுத்தத்தில் இருந்ததால் எனக்கு அதிலிருந்து மீண்டு வர 2 வருடங்கள் தேவைப்பட்டது. டிசம்பர் 9-ஆம் தேதிக்கு முன்பு சித்ரா என்னோடு இருந்தபோது ஒருவர் கேமராவுக்கு முன்பு சித்ராவிடம் அவசர அவசரமாக கையெழுத்து வாங்கினார். அதன்பிறகு சித்ராவின் மரணம் தொடர்பான அனைத்து டெஸ்ட்களையும் செய்து விட்டார்கள். இந்நிலையில் சித்ராவின் உடல் உறுப்புகள் தற்போது வரை பார்னஸ் டிபார்ட்மெண்டில் இருக்கிறது என்று கூறியுள்ளார். மேலும் சித்ரா மரணம் அடைந்து 2 ஆண்டுகள் கழித்து சரண்யா அவருடைய உடல் உறுப்புகள் குறித்து பேசியது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.