Categories
அரசியல் மாநில செய்திகள்

“குடும்ப அரசியல்”…. 18 மாதத்தில் CM ஸ்டாலினின் சாதனை இதுதான்…. ஆர்பி உதயகுமார் செம கலாய்….!!!!!

மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டி அருகே அதிமுக கட்சியின் சார்பில் பால் விலை உயர்வு, சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு போன்றவற்றை கண்டித்து போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தலைமை தாங்கி பேசினார். அவர் பேசியதாவது, அதிமுக ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட மக்கள் நலத்திட்டங்களை முடக்கும் நோக்கத்தில் திமுக செயல் பட்டு கொண்டிருக்கிறது. அதிமுக ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட நலத்திட்டங்களை தான் தற்போது திமுக ரிப்பன் வெட்டி திறந்து வைக்கிறது.

அதன் பிறகு உசிலம்பட்டி பகுதியின் கனவு திட்டமான 58 கால்வாயில் நீரை திறக்க ஒவ்வொரு முறையும் போராட வேண்டி இருக்கிறது. முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற 18 மாத காலத்தில் மகனை அமைச்சராக மாற்றியது மட்டும்தான் அவர் செய்த சாதனை. மக்கள் நலப் ‌ பணிகளில் வேதனை மட்டுமே மிஞ்சியுள்ளது. மேலும் இந்த குடும்ப அரசியலை ஒழித்து கட்ட அதிமுக தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறது என்று காட்டமாக கூறினார்

Categories

Tech |