கடந்த 9ஆம் தேதி அருணாச்சலப் பிரதேச மாநிலம் பகுதியில் இருக்கக்கூடிய இந்தியா – சீனா இடையான எல்லை கோட்டு கட்டுப்பாட்டு பகுதியில் சீன வீரர்கள் அத்திமீறி இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயற்சி செய்து இருக்கின்றனர். இந்த முயற்சியை இந்திய ராணுவ வீரர்கள் தடுத்து நிறுத்தி இருக்கிறார்கள். இது தொடர்பாக டிசம்பர் 11ஆம் தேதி இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருக்கிறது.
இந்த விவகாரம் தொடர்பாக இன்றைய தினம் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாடாளுமன்ற மக்களவையில் விளக்கமளித்திருக்கிறார். அதில், மோதல் சம்பவத்தில் இருநாட்டு ராணுவ வீரர்களுக்குமே காயம் ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இந்த மோதலில் இந்திய ராணுவத்தில் ஒரு ராணுவ வீரர்கள் கூட உயிரிழக்கவோ அல்லது படுகாயம் அடைவோ இல்லை என்று தெரிவித்திருக்கிறார்.
மேலும் மிக முக்கிய விஷயமாக இந்திய ராணுவ வீரர்கள் சரியான நேரத்தில் இந்த விவகாரத்தில் தலையிட்டதன் காரணமாக சீன ராணுவ வீரர்கள் தங்களது நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கி இருக்கிறார்கள் என தெரிவித்திருக்கிறார். இதன் மூலம் இந்திய எல்லைக்குள் அத்துமீறி ஊடுருவ முயன்ற சீன ராணுவத்தின் உடைய செயல் முறியடிக்கப்பட்டிருப்பதாகவும் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மக்களவையில் தெரிவித்து இருக்கிறார்.