Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : ”தமிழகத்தில் NPR நிறுத்திவைப்பு” அமைச்சர் அதிரடி …!!

தமிழகத்தில் NPR பதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்த CAA, NPR, NRC ஆகிய மூன்று சட்டத்தையும் எதிர்த்து தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டு வருகின்றது. பல்வேறு மாநில சட்டமன்றத்தில் இந்த சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள தமிழகத்திலும் இதை எதிர்த்து தீர்மானம் ஏற்றவேண்டுமென்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து வந்தன.கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி NPR பதிவு தொடங்க இருக்கும் நிலையில் தமிழகத்தில் NPR பதிவை நிறுத்தி வைத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் கூறுகையில் , கடந்த 2010 இல் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்குடன் புதிய மூன்று அம்சங்கள் சேர்க்கப்பட்டு NPR என்று கணக்கெடுக்கப்டுகின்றது.

இந்த புதிய மூன்று அம்சங்களால் தான் சிறுபான்மையினருக்கு அச்சம் ஏற்பட்டு இருப்பதாகவும், இந்த அச்சத்தைப் போக்கும் வகையில் மூன்று அம்சங்களில் திருத்தம் மேற்கொள்ள மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.மேலும் மத்திய அரசு எந்த பதிலையும் தெரிவிக்கவில்லை இதனால் தமிழகத்தில் NPR பதிவை நிறுத்தி வைத்துள்ளோம் என்று அமைச்சர் ஆர் பி உதயகுமார் தெரிவித்துள்ளார் .

Categories

Tech |