Categories
உலக செய்திகள்

ஒரு கடி கடித்தால் நொடியில் மரணம்…. உலகிலேயே மிகவும் ஆபத்தான பாம்பு இதுதான்….!!!!

இன் லேண்ட் தைபான் என்ற பாம்பு உலகிலேயே அதிக விஷமுள்ள பாம்பாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த பாம்பு வகைகள் ஆஸ்திரேலியாவில் மட்டுமே காணப்படுகின்றன. இவை வனப்பகுதிகளில் அதிகம் சுற்றித் திரிவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். உள்நாட்டு தைபான் பாம்பு சராசரியாக 1.8 மீட்டர் நீளம் வரை வளரும் எனவும் அதன் கோரைப்பற்கள் 3.5 முதல் 6.2 மில்லி மீட்டர் வரை நீளமாக இருக்கும்.

இந்த பாம்புகள் ஒரு கடியில் 110 மில்லி கிராம் விஷத்தை வெளியிடுகின்றன. அதாவது இந்த விஷம் 100க்கும் மேற்பட்ட மக்களை அல்லது 2.5 மில்லியன் எலிகளை கொள்ளும் என்று பிரிஸ்டல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். தற்போது உலகிலேயே அதிக விஷமுள்ள பாம்பாகவும் இந்த பாம்பு அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Categories

Tech |