தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் நடிகர் அஜித் தற்போது எச். வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் துணிவு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் மஞ்சு வாரியர் ஹீரோயின் ஆக நடிக்க ஜிப்ரான் இசையமைக்கிறார். இந்த படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் நிலையில் நடிகர் விஜயின் வாரிசு திரைப்படமும் பொங்கல் அன்று ரிலீஸ் ஆகிறது. இதனால் அஜித் மற்றும் விஜய் ரசிகர்களுக்கு இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.
இந்நிலையில் துணிவு திரைப்படத்திற்கு பிறகு நடிகர் அஜித்தின் ஏகே 62 திரைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்குகிறார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கும் நிலையில், அடுத்த வருடம் சூட்டிங் தொடங்குகிறது. இந்த படத்தின் புதிய அப்டேட் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி நடிகர் தனுஷ் ஏகே 62 திரைப்படத்தில் வில்லனாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் வாரிசு திரைப்படத்தில் நடிகர் சிம்பு தீ தளபதி பாடலை பாடியதால் தான் நடிகர் அஜித்துக்கு வில்லனாக தனுஷை நடிக்க வைப்பதற்கு பேசி வருவதாக விஜய் ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகிறார்கள்.