Categories
இந்திய சினிமா சினிமா

“என் அம்மாவை பறித்த நோயிலிருந்து நான் மீண்டுள்ளேன்”…. புற்று நோயால் பாதிக்கப்பட்ட பிரபல நடிகை உருக்கம்…..!!!!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே பகுதியைச் சேர்ந்தவர் நடிகை ஹம்சா நந்தினி. இவர் மாடலிங் துறையில் கலக்கி வந்த நிலையில், தெலுங்கு படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இவர் தற்போது தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார். அதன் பிறகு நான் ஈ மற்றும் ருத்ரமாதேவி போன்ற திரைப்படங்களில் நடிகை ஹம்சா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக மார்பக புற்று நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது முழுமையாக சிகிச்சை பெற்று மார்பக புற்றுநோயிலிருந்து மீண்டுள்ளார்.

இந்த மார்பக புற்றுநோயால் நடிகை ஹம்சா தன்னுடைய முடியை இழந்து மொட்டை அடித்தார். இந்நிலையில் நடிகை ஹம்சா தன்னுடைய 38-வது பிறந்த நாளை சூட்டிங் தளத்தில் வைத்து கொண்டாடியுள்ளார். அப்போது தன்னுடைய நோயைப் பற்றி மிக உருக்கமாக பேசியுள்ளார். அவர் கடந்த 18 வருடங்களுக்கு முன்பாக என்னுடைய தாயை இதே புற்றுநோயால் நான் இழந்தேன். தற்போது நானும் இந்த நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் அதிலிருந்து மீண்டு வர முடியாதா என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால் தற்போது நான் அந்த நோயிலிருந்து மீண்டும் முழுமையாக குணமடைந்துள்ளேன். மேலும் தற்போது படப்பிடிப்பிலும் கலந்து கொள்வது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.

Categories

Tech |