மாணவியை பள்ளி தலைமை ஆசிரியர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள மீரட் பகுதியில் அரசு பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 11-ஆம் வகுப்பு படிக்கும் சில மாணவிகளை பள்ளியின் தலைமை ஆசிரியர் கடந்த மாதம் 23-ஆம் தேதி பிருந்தாவனுக்கு சுற்றுலா அழைத்து சென்றுள்ளார். அப்போது ஒரு ஓட்டலில் 2 அறையை வாடகைக்கு எடுத்துள்ளனர். அதில் ஒரு அறையில் சில மாணவிகளும், மற்றொரு அறையில் தலைமை ஆசிரியரும் ஒரு மாணவியும் தங்கியுள்ளனர். இதனையடுத்து அவர் அந்த மாணவிக்கு உணவில் போதை மருந்து கலந்து கொடுத்துள்ளார்.
இதனை சாப்பிட்ட மாணவி மயங்கி விழுந்துள்ளார். பின்னர் அவர் அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் இதுகுறித்து வெளியே கூறினால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார். ஆனால் வீட்டிற்கு வந்த மாணவி நடந்தவற்றை தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுதுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சடைந்த மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருக்கும் தலைமை ஆசிரியரை தீவிரமாக தேடி வருகின்றனர்.