செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் விபி.துரைசாமி, முதலமைச்சர் மாநகராட்சி ஆணையர் பேடி அவர்களையும், மேயர் ப்ரியா காரில் உட்காருங்க, பார்வையிட போகலாம் என சொல்லி இருக்கணும் என்பது தான் எங்களுடைய கருத்து.ஆம்பளை என்றாலும் கூட பரவால்ல, ஒரு பெண் மேயர்… தவறி விழுந்திருந்தா என்ன ஆகுறது ?
ஒரு பெண் மேயரை நடத்துகின்ற விதமா ? இதற்கு பெயர் திராவிட மாடல் அரசா ? அப்படிங்கிறது தான் எங்கள் கேள்வி. முதல்வர் பார்த்து மேயரை உட்கார வைத்து கூட்டிட்டு போய் இருக்க வேண்டும் என்பது எங்களுடைய கருத்து. பெண்களை மதிக்க வேண்டும், பாதுகாப்பையும் தந்திருக்க வேண்டும் என்பதுதான் பாரதிய ஜனதா கட்சியின் கருத்து.
திமுகவில் வாரிசுதான். கலைஞருக்குப்பிறகு முதலமைச்சர் ஸ்டாலின், அவருக்குப் பிறகு இவரு. இவருக்கு பிறகு அவரது, மகன். அப்படித்தான் போகுது. எங்களுக்கு யாருடைய ஆதரவு இல்லாமல் 400 சீட்டு வந்துருவோம். ஆதரவு தேவையில்லை என தெரிவித்தார்.