வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியதாவது, கேரளத்தின் வட பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் அரபிக்கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. அந்தமான் கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்க சுழற்சி உருவாகி நாளை அந்தமானை நோக்கி நகர்வதால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் மாநில நிலவரத்தின்படி இன்று 26 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை தொடரும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் 1-ம் தேதி தொடங்கியது முதல் தற்போது வரை 856 மில்லி மீட்டர் அளவு வடகிழக்கு பருவமழை பதிவாகியுள்ளது. இந்த காலத்தில் இயல்பான அளவு 736 மில்லி மீட்டர் ஆகும். ஆனால் இயல்பை விட 16 சதவீதம் அதிகமாக மழை பெய்துள்ளது என அவர் கூறியுள்ளார்.