ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.
கன்னியாகுமரியில் இருந்து கடந்த செப்டம்பர் மாதம் 7- ஆம் தேதி ராகுல் காந்தி தலைமையில் இந்திய ஒற்றுமைக்கான நடை பயணம் தொடங்கப்பட்டது. இந்த நடைபயணம் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திர பிரதேசம், தெலுங்கானா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களை கடந்து தற்போது ராஜஸ்தானில் நடைபெறுகிறது. இந்நிலையில் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் “நமது நாட்டில் 100 வாலிபர்கள் இருக்கிறார்கள் என்றால் அதில் 42 பேருக்கு வேலை இல்லை. இதனை வேலையின்மை புள்ளி விவரங்கள் தெளிவாக காட்டுகிறது. இதனால் இளைஞர்களின் கண்களில் கண்ணீரும் காலில் கொப்புளங்களும் உள்ளது. மேலும் அவர்கள் தாங்கள் வேலை வாய்ப்பை பெறும் வரை இதனை நிறுத்த மாட்டார்கள் என கூறியுள்ளார்.
மேலும் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் செய்தியாளர்களிடம் கூறியிருந்ததாவது,” ஹிமாச்சல்ப் பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியினர் வெற்றி பெற்றனர். இந்த வெற்றிக்கு மக்கள் மற்றும் தலைவர்களின் முயற்சிதான் காரணம். மேலும் ராகுல் காந்தியின் பாரத் சோடா யாத்ராவும் காங்கிரஸ் வெற்றிக்கு உதவியது. அதைவிடவும் சோனியா காந்தியின் ஆசீர்வாதம் எங்களுக்கு உள்ளது என அவர் கூறியுள்ளார்.