Categories
தேசிய செய்திகள்

குஜராத் சட்டப்பேரவை தேர்தலின் வெற்றிக்கு…. காரணமே அவங்கதான்?…. சர்பானந்த சோனோவால் ஸ்பீச்….!!!!

குஜராத் சட்டப்பேரவை தேர்தலின் வெற்றிக்கு பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையே காரணம் என மத்திய அமைச்சரும், பா.ஜ.க தலைவருமான சர்பானந்த சோனோவால் தெரிவித்தார். குஜராத் முதலமைச்சராக பூபேந்திர படேல் பதவியேற்பு விழாவுக்கு வந்த போது, அசாம் முன்னாள் முதல்வர் அகமதாபாத் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது,  பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியா உலகின் தலை சிறந்த நாடாக மாறும் என்பது உறுதி.

சென்ற 60 வருடங்களாக வெவ்வேறு மாநிலங்களிலும், காங்கிரஸ் ஆட்சியைக் கையாண்டது. இவ்வளவு வருடங்கள் வாய்ப்பு கிடைத்தும் அவர்களால் எதுவும் செய்ய இயலவில்லை. பிரதமர் மோடி தலைமையில் 2024ல் மீண்டும் பா.ஜ.க ஆட்சியமைக்கும். இந்திய மக்கள் இனிமேல் பிரதமர் மோடியை மட்டுமே ஆதரிப்பார்கள் என்று சோனோவால் நம்பிக்கை தெரிவித்தார். காந்தி நகரிலுள்ள புதிய தலைமை செயலகத்தில், குஜராத்தின் 18-வது முதல்வராக பூபேந்திர பட்டேல் இன்று பதவியேற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |