சபரிமலை கோவிலின் போலீஸ் சிறப்பு அதிகாரி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கேரளாவில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் தமிழ்நாடு மட்டும் இல்லாமல் பல மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மாலை போட்டு விரதம் இருந்து செல்வது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் ஏராளமான பக்தர்கள் சென்று வருகின்றனர். இந்நிலையில் கோவிலின் போலீஸ் சிறப்பு அதிகாரி ஹரீந்திரநாத் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்ததாவது, “ஏற்படும் கூட்ட நெரிசலை குறைப்பதற்காக பம்பையில் பக்தர்கள் தடுத்து நிறுத்தப்படுவார்கள்.
பின்னர் அவர்கள் குளுக்கள்,குளுக்களாக பிரித்து மலை ஏற அனுப்பி வைக்கப்படுவார்கள். மேலும் பக்தர்கள் மலையேறும் போது அவர்கள் சோர்வடையாமல் இருப்பதற்காக பல இடங்களில் சுக்கு நீர் உள்ளிட்ட பல பானங்கள் வழங்கப்படுகிறது. எனவே பக்தர்கள் சன்னிதானத்தில் ஏற்படும் கூட்ட நெரிசலை குறைக்க சாமியை தரிசனம் செய்த உடனே மலையிறங்க வேண்டும்” என அவர் கூறியுள்ளார்.