Categories
மாநில செய்திகள்

“பட்டு சேலைகள், சால்வைகள், செருப்புகள்”…. அம்மா ஜெயலலிதாவின் பொருட்கள் ஏலம்?…. கோர்ட் முடிவு என்ன…???

தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத தலைவர்களில் ஒருவராக விளங்கியவர் அம்மா ஜெயலலிதா. இவர் கடந்த 2016-ம் ஆண்டு உடல் நலக்குறைவினால் உயிரிழந்தார். தமிழகத்தின் முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக புகார் எழுந்ததன் அடிப்படையில் அவருடைய வீட்டில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது ஜெயலலிதா வீட்டில் இருந்து 27 வகையான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் 11,344 விலை உயர்ந்த பட்டுப் புடவைகள், சால்வைகள் மற்றும் 750 ஜோடி செருப்புகள் போன்றவைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த பொருட்கள் நீண்ட நாட்களுக்கு இருக்காது என்பதால் இவற்றை ஏலத்தில் விட வேண்டும் என பெங்களூருவைச் சேர்ந்த நரசிம்மமூர்த்தி என்ற சமூக ஆர்வலர் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக உச்ச நீதிமன்றத்திற்கு மனு அனுப்பினார். ஆனால் இந்த மனு தொடர்பாக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் மீண்டும் நரசிம்ம மூர்த்தி உச்சநீதிமன்றத்திற்கு மனு அனுப்பியுள்ளார். மேலும் இரண்டாவது முறையாக மனு அனுப்பப்பட்டுள்ளதால் ஜெயலலிதாவின் பொருட்கள் அனைத்தும் ஏலத்தில் விடப்படும் என்று பலரும் கூறுகிறார்கள்.

Categories

Tech |