ஆளுநர் ஆர்.என்.ரவி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இன்று தமிழ்நாடு முழுவதும் மகாகவி பாரதியாரின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இது குறித்து கவர்னர் ஆர்.என். ரவி கூறியதாவது, “நமது நாடு ரிஷிகளாலும், முனிவர்களாலும் உருவாக்கப்பட்டது. இந்நிலையில் ஆங்கிலம் நம் மொழிகளின் பெருமையை தடுக்கிறது. அதனால் தான் பிரதமர் நமது நாட்டின் மொழிகளுக்கு முக்கியத்துவம் தருகிறார். நமது மொழிகள் பாரம்பரியமானவை. அதிலும் தமிழ் மொழியில் உள்ள பல வார்த்தைகளுக்கு ஆங்கிலத்தில் இணையான வார்த்தை இன்று வரை இல்லை. மேலும் நம் பாரத மொழிகள் உலகின் மற்ற மொழிகளை விட உயர்ந்தது மற்றும் முதன்மையானது என்பதை அனைவரும் நினைவில் கொள்ளுங்கள்.
இந்நிலையில் உலக நாடுகளுக்கு இடையே ஏற்படும் பிரச்சனைகளை தீர்க்க அவர்கள் இந்தியாவை தான் அணுகுகிறார்கள். மேலும் நாட்டின் விடுதலைக்காக மட்டுமின்றி தேச ஒற்றுமைக்காகவும் பாரதியார் கவிதை எழுதியுள்ளார். எனவே இன்று அனைவரும் அவரின் பெருமையை புகழ வேண்டும் என கூறியுள்ளார்.