Categories
மாநில செய்திகள்

கொரோனா அச்சுறுத்தல் – ஐபிஎல் போட்டிகளை நடத்துவது குறித்து நாளை மறுநாள் அவசர கூட்டம்!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐபிஎல் போட்டிகளை நடத்துவது குறித்து நாளை மறுநாள் அவசர கூட்டம் நடைபெற உள்ளது.

சீனா தொடங்கி உலக நாடுகள் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவிலும் பரவியுள்ளது. உலகம் முழுவதும் 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ள நிலையில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 60கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனிடையே மார்ச் 29ம் தேதி தொடங்கி மே 4ம் தேதி வரை ஐபிஎல் போட்டிகள் நடக்க உள்ளன. இந்தப் போட்டிகளைக் காண மைதானங்களில் 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை மக்கள் கூடுவார்கள்.

எனவே வைரஸ் பரவ அதிக வாய்ப்புள்ளதால் இந்தப் போட்டிகளுக்குத் தடை விதிக்க கோரி சென்னை நீதிமன்றத்தில் நேற்று வழக்கு தொடரப்பட்டது இந்த நிலையில் கொரோனா அச்சுறுத்தல் குறித்து நாளை மறுநாள் ஐபிஎல் நிர்வாகிகள் அவசர கூட்டம் நடைபெற உள்ளது. ஐபிஎல் போட்டிகளை நடத்துவது குறித்து முக்கிய முடிவு எடுக்க வாய்ப்புள்ளது.

Categories

Tech |