ஜார்ஜ் பிளாய்டு கொலை வழக்கில் மற்றொரு குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில் உள்ள ஒரு பகுதியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சாலையில் நடந்து சென்ற ஜார்ஜ் பிளாய்ட் என்பவரை சந்தேகத்தின் பேரில் போலீசார் மடக்கி பிடித்தனர். மேலும் அவரை தரையில் தள்ளி அவரின் கழுத்தின் மீது கால் வைத்து பலமாக அழுத்தினர். இதனால் மூச்சு திணறி அவர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த நாட்டு மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். அதன் பின்னர் இந்த கொலைக்கு காரணமாக இருந்த 4 போலீசார் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இந்த வழக்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது முக்கிய குற்றவாளி ஒருவருக்கு சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். இந்த நிலையில் கடந்த மாதம் மற்றொரு போலீஸ் அதிகாரி குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து நேற்று இந்த வழக்கில் நீதிபதி தனது தீர்ப்பை வழங்கினார். அதில் இந்த கொலையில் பங்கு வகித்த குற்றத்திற்காக அலெக்சாண்டருக்கு 3 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்