பாக்கியலட்சுமி தொடரில் இருந்து பிரபல நடிகை வெளியேறியதாக செய்தி வெளியாகி உள்ளது.
தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் தற்போது பாக்கியலட்சுமி நெடுந்தொடர் ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த சீரியலில் கணவன் ஏமாற்றிய பிறகு துவண்டு விடாமல் தைரியத்துடன் உழைத்து தனது குடும்பத்தை பாக்கியலட்சுமி கவனிக்கின்றார். இந்த தொடரில் ரித்திகா நடித்து வருகின்றார். இவர் அண்மையில் வினு என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
மேலும் ஹனிமூன் சென்ற ஃபோட்டோவையும் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்திருந்தார். இந்த நிலையில் ரித்திகா திருமணத்திற்கு பிறகு தனது நடிப்பை நிறுத்த முடிவெடுத்து இருப்பதாக சொல்லப்படுகின்றது. மேலும் தொடரிலிருந்து விலகியதாகவும் சொல்லப்படுகின்றது. ஆனால் இதில் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.