Categories
தேசிய செய்திகள்

உணவில் கிடந்த முடி!… கோபத்தில் கணவரின் வெறிச்செயல்…. பரபரப்பு சம்பவம்….!!!!

உத்திரபிரதேசம் மாநிலம் பிலிபித் மாவட்டத்தில் ஒரு மோசமான சம்பவம் அரங்கேறி இருக்கிறது. அதாவது, உணவில் முடி இருந்ததால் ஆத்திரம் அடைந்த கணவர் தன் மனைவிக்கு மொட்டை அடித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக கணவர் உட்பட 3 பேர் மீது வரதட்சனை கொடுமை சட்டத்தில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து திருமணம் ஆனதிலிருந்து ரூபாய்.15 லட்சம் வரதட்சணை கேட்டு துன்புறுத்தி வந்ததாக மனைவி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இவ்வாறு சாப்பாட்டில் முடி விழுந்ததால் கணவர் தன் மனைவிக்கு மொட்டை அடித்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Categories

Tech |