Categories
தேசிய செய்திகள்

“திராவிட மாடல் என்ற சொல் தமிழ் இல்லை”… ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஓபன் டாக்….!!!!!

தூத்துக்குடியில் நடைபெறும் மகாகவி பாரதியாரின் 141 வது பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை வண்ணாரப்பேட்டையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகைக்கு வந்திருந்தார். இதையடுத்து அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது “திராவிட மாடல் என்ற சொல் தமிழ் இல்லை.

இதனால் ஒரு நல்ல தமிழ் பெயரை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கண்டுபிடிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும் என்னை அரசியல்வாதியாக பார்க்கின்றனர். ஆனால் நான் ஆளுநராக மட்டுமே வேலை பார்க்கிறேன். ஆளுநராக அரசுடன் ஒற்றுமையாக செயல்பட்டு அரசுக்கு இணக்கமாக இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

Categories

Tech |