Categories
தேசிய செய்திகள்

பெரும் பரபரப்பு….!! போராட்டத்தில் மயங்கி விழுந்த சர்மிளா ரெட்டி…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

மயங்கி விழுந்த சர்மிளா ரெட்டிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஆந்திர பிரதேசத்தின் முதல் மந்திரியாக இருப்பவர் ஜெகன்மோகன் ரெட்டி. இவரின் சகோதரி சர்மிளா ரெட்டி தெலுங்கானா என்ற பெயரில் கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். கடந்த மாதம் இவர்  தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர் ராவுக்கு எதிராக அவரது இல்லத்திற்கு முன்பு போராட்டம் நடத்த போவதாக கூறினார். இதனால் அப்பகுதியில் போலீசார குவிக்கப்பட்டனர். அப்போது அங்கு காரில் வந்த சர்மிளா ரெட்டியை போலீசார் வழிமறித்து  காரை கிரேன்  எந்திர மூலம் தூக்கிச் சென்றனர்.

பின்னர்  அவரை  காவல் நிலையத்தில் சிறையில்  அடைத்தனர். இந்த நிலையில் சர்மிளாவின் தாயார் ஓய். எஸ். விஜயா தனது மகளை பார்ப்பதற்காக வந்தார். அப்போது அவரையும் போலீசார் கைது செய்து வீட்டுக் காவலில் சிறை வைத்தனர். இந்நிலையில் வெளியே வந்த சர்மிளா ரெட்டி செய்தியாளர்களிடம் கூறியிருந்ததாவது, “எங்கள் கட்சிக்கு மக்கள் கொடுத்த வரவேற்பை முதல் மந்திரியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இதனால் அவர் பயந்து போய் உள்ளார். மேலும் அவர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை.

மேலும் எனது பாதயாத்திரைக்கு அனுமதி அளிக்க வேண்டும்” என கூறியிருந்தார். அதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது பாதை யாத்திரைக்கு அனுமதி அளிக்க வேண்டும் எனக் கூறி அம்பேத்கர் சிலை அருகே போராட்டத்தில் ஈடுபட்டார். ஆனால் அவரை போலீசார் கட்டாயப்படுத்தி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். ஆனாலும் அவர் தனது வீட்டில் இருந்தபடியே உண்ணாவிரதப் போராட்டத்தில் இன்று ஈடுபட்டார். அப்போது திடீரென அவர் மயங்கி கீழே விழுந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது தொண்டர்கள் உடனடியாக மீட்டு ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு  அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Categories

Tech |