Categories
மாநில செய்திகள்

“மயில் கடந்த வனம் போல் புயல் கடந்தது”…. தமிழக முதல்வர் ஸ்டாலினை புகழ்ந்து தள்ளிய கவிஞர் வைரமுத்து…..!!!!!

தமிழகத்தில் மாண்டஸ் புயல் நேற்று கரையை கடந்த நிலையில் சென்னையில் கோர தாண்டவம் ஆடிவிட்டு சென்றது. அதன் பிறகு புயல் மற்றும் கனமழையை முன்னிட்டு தமிழக அரசு அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்ததால் பெருமளவு சேதங்கள் இல்லை. இந்நிலையில் கவிஞர் வைரமுத்து மாண்டஸ் புயலை தமிழக அரசு சிறப்பான முறையில் கையாண்டதாக கூறி முதல்வர் ஸ்டாலினை பாராட்டி ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில் முன்கூட்டியே திட்டமிடல், முறையான பயிற்சி, மாநகராட்சி ஊழியர்களின் உறங்காத உழைப்பு, அமைச்சர்களின் அர்ப்பணிப்பு எல்லாம் கூடியதால் சிரம் வாங்காமல் சிராய்ப்போடு கடந்தது புயல். சிறு குறைகளும் களையப்படும் என்று கூறினார் முதல்வர். மயில் கடந்த வனம் போல் புயல் கடந்தது. பாராட்டும் நன்றியும் என்று பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |