தமிழகத்தில் கடந்த அக்டோபர் 30-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கனமழை கொட்டி தீர்த்தது. அதிலும் குறிப்பாக அக்டோபர் முதல் வாரத்தில் சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்ததால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டன. அதன் பிறகு ஓரளவு மலைப்பொழிவு குறைந்த நிலையில் அடுத்தடுத்து புயல்கள் உருவானதால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தொடர் விடுமுறைகள் அறிவிக்கப்பட்டது.
அவ்வகையில் இந்த வருடம் புயல் மற்றும் கனமழை காரணமாக ஏகப்பட்ட விடுமுறை அளிக்கப்பட்டு விட்டது. சமீபத்தில் மாண்டஸ் புயல் காரணமாக கிட்டத்தட்ட 20 மாவட்டங்களுக்கு இரண்டு நாட்களாக விடுமுறைகள் அறிவிக்கப்பட்டன. இதனை ஈடு செய்ய இனி அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் திறந்திருக்கும் என்று தெரிகின்றது. இனிவரும் நாட்களில் வடகிழக்கு பருவமழையும் கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் உள்ளதால் விடுமுறைகள் அதிக அளவு இருக்காது என தகவல் வெளியாகி உள்ளது.