தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் சமந்தா அண்மையில் மயோசிடிஸ் சென்ற கொடிய நோயால் பாதிக்கப்பட்டார். அந்த நோய் பாதிப்பில் இருந்து சற்று மீண்டுள்ளதாக அண்மையில் அவர் தெரிவித்த நிலையில் மீண்டும் அவர் உடல் நல மோசம் அடைந்துள்ளதாக சில செய்திகள் இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கின்றன. சமந்தா தற்போது தொடர் சிகிச்சையில் இருக்கிறார்.
அவர் விரைவில் குணமடைய வேண்டி பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.. இந்நிலையில் சமந்தா விரைவில் நலம் பெற வேண்டும் என்று நடிகை பியா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டு கால் வீக்க பிரச்சனையால் தான் மிகவும் அவதிப்பட்டேன், அந்த காலங்கள் மிகவும் கொடூரமானவை. இதனால் சமந்தாவின் தற்போதைய நிலையை தன்னால் உணர முடியும். அவர் விரைவில் குணமடைய கடவுளிடம் பிரார்த்தனை செய்வதாக அவர் தெரிவித்துள்ளார்.