Categories
தேசிய செய்திகள்

சூப்பரோ சூப்பர்!… வேற லெவலில் மாறப்போகுதாம்…. ரயில் பயணிகளுக்கு வெளியான அசத்தல் குட் நியூஸ்…..!!!!!

நாடாளுமன்றத்தில் ரயில்வே நிலையங்களின் மேம்பாடு ஒரே நிலையம் ஒரே விளைபொருள் திட்டம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது‌. அதற்கு மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் பதிலளித்தார். அவர் கூறியதாவது, ரயில்வே நிலையங்களில் பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் பிறகு முக்கிய நகரங்கள், சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த இடங்களிலும் ரயில் நிலையங்களை மேம்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

அதன் பிறகு 43 ரயில் நிலையங்களில் மறு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டதோடு, 21 ரயில் நிலையங்களை மேம்படுத்துவதற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. அதன்படி மொத்தம் 57 ரயில் நிலையங்களில் மறு மேம்பாடு செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒரே நிலையம்  ஒரே விளைபொருள் திட்டத்தை 535 ரயில் நிலையங்களில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் உள்ளூர் மக்கள் மற்றும் புறந்தள்ளப்பட்ட உள்ளூர் பிரிவை சேர்ந்த வியாபாரிகள் தங்களுடைய பொருட்களை சந்தைக்கு எடுத்துச் சென்று லாபத்தை ஈட்ட முடியும்.

ஒருவேளை பொருட்கள் அதிகமாக இருப்பின் வியாபாரிகளுக்கு சுழற்சி முறையில் வாய்ப்புகள் கொடுக்கப்படும். இந்த திட்டத்திற்கான சோதனை முயற்சி கடந்த மார்ச் மாதம் 25-ஆம் தேதி தொடங்கப்பட்ட நிலையில், தற்போது 532 ரயில் நிலையங்கள் ஒரே நிலையம் ஒரே விளைபொருள் திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் இதன் மூலம் உள்ளூர் வியாபாரிகள் மற்றும் புறந்தள்ளப்பட்ட வியாபாரிகள் தங்களுடைய பொருட்களை சந்தைக்கு எடுத்துச் சென்று நல்ல லாபம் ஈட்ட முடியும்.

Categories

Tech |