10- ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள சித்தாலப்பாக்கம் ஏரிக்கரை தெருவில் முருகன் என்பவர் விஷத்தை வருகிறார். இவர் பரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சுதீப்(15) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கோபத்தில் முருகனின் மனைவி கடந்த சில நாட்களுக்கு முன்பு தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் முருகன் மற்றும் சுதீப் மட்டும் வீட்டில் இருந்தனர். ஆனால் முருகன் சரிவர வேலைக்கு செல்லாமல் போதையில் வீட்டிலேயே இருந்துள்ளார்.
நேற்று முன்தினம் பள்ளி முடிந்து சுதீப் தாமதமாக வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது நான் சரியாக படிக்காததால் பரோட்டா மாஸ்டராக வேலை பார்க்கிறேன். நீயாவது படித்து முன்னுக்கு வர வேண்டும் என மகனை கண்டித்ததாக தெரிகிறது. இதனால் மன உளைச்சலில் சுதீப் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். நீண்ட நேரமாகியும் மகன் அறையை விட்டு வெளியே வராததால் சந்தேகமடைந்த முருகன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது சுதீப் தூக்கில் சடலமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.