தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சாய் பல்லவி. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்துவரும் நிலையில், ஹிந்தி படங்களில் மட்டும் நடிப்பதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டார். ஏனெனில் பாலிவுட் சினிமாக்களில் அதிக கவர்ச்சி காட்ட வேண்டும் என்பதால் சாய் பல்லவி பாலிவுட் படங்களை நிராகரித்து விட்டார். இந்நிலையில் நடிகை சாய் பல்லவி முதன்முறையாக ஒரு பாலிவுட் படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது பிரபல நடிகர் அல்லு அர்ஜுனின் தந்தையும் தயாரிப்பாளருமான அல்லு அரவிந்த் ராமாயணம் படத்தை ஹிந்தியில் தயாரிக்கப் போவதாக அறிவித்துள்ளார்.
இந்த படத்தில் ராமராக ரன்பீர் கபூர் நடிக்க, ராவணனாக ஹிரித்திக் ரோஷன் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் நடிகை தீபிகா படுகோனே சீதையாக நடிப்பதற்கு ஒப்பந்தமாகிய நிலையில் அதிக கால்ஷீட் கொடுக்க வேண்டியிருப்பதால் படத்தில் இருந்து தீபிகா விலகியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகத்தான் தற்போது நடிகை சாய் பல்லவியிடம் சீதையாக நடிப்பதற்கு பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. இந்நிலையில் சீதை வேடத்தில் கவர்ச்சி காட்ட வேண்டிய அவசியம் ஏற்படாததால் நடிகை சாய் பல்லவி நடிப்பதற்கு ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் ஸ்கிரிப்ட் முழுவதையும் படித்துவிட்டு தனக்கு பிடித்தால் கண்டிப்பாக இந்தி ராமாயணத்தில் தான் நடிப்பேன் என்று சாய்பல்லவி கூறியதாக கூறப்படுகிறது.