காந்தாரா விமர்சனத்திற்கு ராஷ்மிகா பதில் அளித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு என இரண்டிலும் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் ராஷ்மிகா மந்தனா. இவர் நடிப்பில் அண்மையில் வெளியான புஷ்பா, சீதாராமம் உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது விஜய்யுடன் இணைந்து வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இவர் முதலில் கன்னட திரைப்படத்தில் தான் அறிமுகமானார். அத்திரைப்படத்தை ரிஷப் செட்டி இயக்கி இருந்தார்.
அண்மையில் வெளியான காந்தாரா திரைப்படத்தையும் அவர் தான் இயக்கி இருந்தார். இத்திரைப்படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி வாகை சூட்டியுள்ளது. இந்த நிலையில் பேட்டி ஒன்றில் ரஷ்மிகாவிடம் காந்தாரா திரைப்படத்தை பார்த்தீர்களா என கேட்டபோது இன்னும் பார்க்கவில்லை என பதிலளித்தார்.
இதனால் கன்னட ரசிகர்கள் அவரை ஆபாச வார்த்தைகளால் சோசியல் மீடியாவில் கடுமையாக சாடி வந்தார்கள். மேலும் கன்னட திரைப்படங்களில் இனி நடிக்க கூடாது என்றும் கூறி வந்தார்கள். இந்த நிலையில் இதுப்பற்றி ராஷ்மிகா தெரிவித்துள்ளதாவது, என்னை விமர்சிப்பவர்களுக்கு என்னிடம் இருந்து தருவதற்கு அன்பை தவிர எதுவும் இல்லை.
காந்தாரா வெளியான 2-3 நாட்களிலே படத்தை பார்த்து விட்டீர்களா என கேட்டார்கள். அப்போது பார்க்க முடியவில்லை. பிறகு படம் பார்த்துவிட்டு படக்குழுவிற்கு வாழ்த்துக்களை கூறினேன். அவர்களும் நன்றி தெரிவித்தார்கள். எங்களது தனிப்பட்ட வாழ்க்கையில் என்ன நடக்கின்றது என்பதை எல்லாம் கேமரா வைத்து வெளியே காட்ட முடியாது என தெரிவித்துள்ளார்.
#RashmikaMandanna on Trolls and also clarifies she did actually watch #Kantara recently! pic.twitter.com/9jqGM68E6G
— AndhraBoxOffice.Com (@AndhraBoxOffice) December 8, 2022