Categories
தேசிய செய்திகள்

“இந்தியாவின் முதல் கார்பன்-சமநிலை பண்ணை”…. எது தெரியுமா?…. முதல் மந்திரி பினராயி விஜயன் அறிவிப்பு….!!!!

இந்தியாவின் முதல் கார்பன்-சம நிலை பண்ணையாக கொச்சியின் அலுவாவிலுள்ள விதைப் பண்ணையை கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் இன்று அறிவித்தார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது “கேரளா உணவில் தன்னிறைவு அடையவேண்டும். எனினும் சுற்றுச்சூழல் சம நிலையை பராமரிக்க வேண்டும். விவசாயத்திலிருந்து வெளிவரும் கரியமில வாயுவை குறைப்பதன் வாயிலாக காலநிலை மாற்றத்தை சமாளிக்க முடியும்.

இந்த பண்ணையில் முன் மாதிரியான கண்டுபிடிப்புகளானது செய்யப்பட்டுள்ளது. மேலும் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் கார்பன்-சம நிலை பண்ணைகள் துவங்கப்படும். பழங்குடியினர் பகுதிகளில் இதனை செயல்படுத்த மகளிர் சங்கங்கள் உருவாக்கப்படும். இதற்கிடையில் வீடுகளில் சோலார் பேனல்கள் பொருத்துவதை அரசு ஊக்குவித்து வருகிறது. அடுத்த நிதி ஆண்டில் சுற்றுச்சூழல் பட்ஜெட் இருக்கும். அவற்றில் சுற்றுச்சூழலுக்கான செலவுகள் மற்றும் வரவு செலவுத் திட்டம் இருக்கும்” என்று அவர் கூறினார்.

Categories

Tech |