Categories
தேசிய செய்திகள்

சினிமாவை மிஞ்சிய சம்பவம்…. 150 அடி பள்ளத்தில் விழுந்த வருங்கால மனைவியை “ஹீரோ போல் காப்பாற்றிய வாலிபர்”…..!!!!!

செல்பி எடுக்க முயன்ற போது பெண் தவறி விழுந்த சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலத்தில் உள்ள ஒரு  பகுதியில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் கல்லுவாதுக்கலை பகுதியை  சேர்ந்த சாந்திரா என்ற பெண்ணிற்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. இவர்கள் திருமணம் நேற்று நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம்  வினு கிருஷ்ணன் மற்றும் சாந்திர ஆகிய 2 பேரும்  பல கோவில்களுக்கு சென்று சாமியை  தரிசனம் செய்தனர். பின்னர் காட்டுப்புரம் பகுதியில் அமைந்துள்ள கல்குவாரிக்கு சென்றுள்ளனர். அப்போது அங்கு 150 அடி பள்ளத்தில் தண்ணீர் தேங்கும்  குட்டை ஒன்று இருந்துள்ளது. இதனை பார்த்த அவர்கள் குவாரியின் மேல்பகுதியில் நின்று புகைப்படம் எடுக்க முயன்றுள்ளனர்.

அப்போது திடீரென சாந்திரா கால் தவறி 150 அடி பள்ளத்தில் தேங்கி இருந்த தண்ணீருக்குள் விழுந்துவிட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த வினு  கிருஷ்ணன் உடனடியாக தண்ணீருக்குள் குதித்து சாந்திராவை காப்பாற்றியுள்ளார். பின்னர் இருவரும்  பாறையை பிடித்துக்கொண்டு காப்பாற்றுங்கள்  காப்பாற்றுங்கள் என கத்தியுள்ளனர். இவர்களின் சத்தத்தை கேட்டு வந்த தொழிலாளர்கள் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் 2  பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்நிலையில் தனது உயிரை பொருட்படுத்தாமல் தனது வருங்கால மனைவியின் உயிரை காப்பாற்றிய அவரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Categories

Tech |