Categories
மாநில செய்திகள்

மாண்டஸ் புயலால் முறிந்து விழுந்த மரங்கள்….. மீட்பு பணிகள் தீவிரம்…. மாநகராட்சி ஆணையர் தகவல்….!!!!

விழுந்த மரங்களை அகற்றும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

வங்கக்கடலில் உருவான கற்றழுத்த  தாழ்வுப்  பகுதி மாண்டஸ் புயலாக வலுப்பெற்றது. இதனால் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட மாநிலங்களில் பல இடங்களில் கன மழை பெய்தது. இந்த நிலையில் நேற்று இரவு 10 மணியளவில் மாண்டஸ்  புயல் மாமல்லபுரம் அருகே கரையை  கடக்க தொடங்கியது. பின்னர் இன்று  அதிகாலை 3 மணி அளவில் மாண்டஸ் முழுமையாக கரையை கடந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்நிலையில் சென்னை மற்றும் வடகடலோர மாவட்டங்களில் புயலால் சேதமடைந்த மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.  அதில்  மாண்டஸ் புயலால்  விழுந்த  மரங்களை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மரம் அறுக்கும் இயந்திரங்கள், ஜெனரேட்டர்கள், 911 மோட்டார் வாகனங்கள், ஜேசிபி, டிப்பர் லாரி உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட வாகனங்கள் மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் உள்ள சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்காமல் வழக்கம்போல் போக்குவரத்து சேவை நடைபெற்று வருகிறது என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |