தென் இந்திய திரையுலகில் பிரபல நடிகைகளில் ஒருவராகிய ஹன்சிகா சில நாட்களுக்கு முன்னதாக தன் காதலரை கரம் பிடித்தார். ஜெய்ப்பூரில் ஒரு கோட்டையில் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் பிரபலங்கள் மத்தியில் ஹன்சிகா திருமணம் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது.
இந்நிலையில் ஹன்சிகா அவரது கணவருடன் மாமியார் வீட்டில் தான் உள்ளார். தற்போது ஹன்சிகா அவர் கணவர் மற்றும் குடும்பத்தினருக்கு சமைத்து கொடுத்துள்ளார். அதாவது, ஹன்சிகா தனது கையால் அல்வா செய்து அனைவருக்கும் கொடுத்திருக்கிறார். அந்த புகைப்படத்தை அவரது கணவரே பகிர்ந்திருக்கிறார். தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.