திருமணம் முடிந்த பெண்கள் தங்களுடைய ஆதாரில் கணவரின் பெயரை ஆன்லைன் மூலமாக இணைப்பது குறித்து நாம் இப்பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
# முதலாவதாக உங்களது ஆதார் கார்டு மற்றும் திருமணம் சான்றிதழை தயாராக வைத்திருக்கவும்.
# திருமண சான்றிதழை ஸ்கேன் செய்தோ (அ) தெளிவாக படம் எடுத்தோ கையில் வைத்துக்கொள்ள வேண்டும்.
# அதன்பின் https://myaadhaar.uidai.gov.in/ என்ற ஆதாரின் இணையதளத்துக்கு சென்று, அதில் உங்கள் ஆதார் எண் பதிவிட வேண்டும்
# ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்ட எண்ணிற்கு வரும் OTP-ஐ உள்ளிட்டு உங்களது ஆதார் கணக்கிற்குள் உள்நுழைய வேண்டும்.
# பின் வலதுபக்கம் மேல் ஓரத்தில் உங்களது ஆதார் கணக்குடன் இணைத்த புகைப்படத்துடன் ஆதார் கணக்கு திறக்கும்.
# அவற்றில் உங்களது பெயர், தந்தை (அ) கணவர் பெயர், வீடு விலாசம், பிறந்ததேதி மாற்றும் தெரிவு இருக்கும், அதனை க்ளிக் செய்யவேண்டும்.
# பின் அதில் நீங்கள் எதை மாற்றவேண்டும் என்ற விருப்பம் கேட்கும். அதன்படி பெயர் மாற்றம் என்று கொடுத்து தந்தை பெயருக்கு பதில் கணவர் பெயரை உள்ளிட்டு மாற்றவும்.