Categories
மாநில செய்திகள்

பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம்…. சென்னை காவல் ஆணையர் திடீர் எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

மாண்டஸ்புயல் கரையை கடந்ததாக அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் வரை பொதுமக்கள் யாரும் அத்தியாவசிய தேவை இன்றி வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் கடற்கரைக்குச் செல்ல வேண்டாம் எனவும் சென்னை பெருநகர காவல் துறை ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். கடல் அலைகள் வேகம் அதிகப்படியாகவும் ஆபத்தான முறையிலும் இருப்பதால் பொதுமக்கள் யாரும் மெரினா உட்பட எந்த கடற்கரைக்கும் செல்ல வேண்டாம். மழை வெள்ளம் சூழ்ந்த இடங்களில் பாதிப்புகளை அறிந்து விரைந்து பணியாற்ற வேண்டும் என போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புயலைத் தொடர்ந்து சென்னை பெருநகர காவல் துறையில் சிறப்பு கட்டுப்பாட்டு வரை அமைக்கப்பட்டு 044-23452372 என்ற சிறப்பு உதவி எண் வழங்கப்பட்டுள்ளது. புயல் காரணமாக அவசர உதவி மற்றும் இடர்பாட்டால் காவல்துறை அவசர உதவி தொலைபேசி எண் 100 மற்றும் 112 ஆகியவற்றை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் எனவும் புயல் கரையை கடந்து விட்டதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் யாரும் அத்தியாவசிய தேவை என்று வெளியில் வர வேண்டாம் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

Categories

Tech |