Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள்…. அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என மத்திய அரசை தொடர்ந்து தமிழக அரசு வலியுறுத்தி வரும் பட்சத்தில் மறுபக்கம் அரசு பள்ளி மாணவர்கள் அனைவரும் நீட் தேர்வில் தேர்ச்சி அடையும் விதமாக மாணவர்களுக்கு பள்ளிகளிலேயே இலவச பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, தமிழகத்தில் தென்காசி, மயிலாடுதுறை, பெரம்பலூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் ஆகிய ஆறு மாவட்டங்களில் விரைவில் மருத்துவ கல்லூரிகள் அமைக்கப்படும் எனவும் இதற்கான கோரிக்கையை மத்திய அரசுக்கு முதல் வஸ்தாலின் விடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

கடந்த வருடம் வரை மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களின் எண்ணிக்கை 150 ஆக இருந்த நிலையில் இந்த ஆண்டு கூடுதலாக 50 மாணவர்களை சேர்க்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. தற்போது 11 மருத்துவக் கல்லூரிகளில் 1450 மாணவர்களை சேர்க்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |