Categories
மாநில செய்திகள்

இன்றும் தேர்வுகள் ஒத்திவைப்பு…. எந்தெந்த தேர்வுகள்…? மாணவர்கள் கவனத்திற்கு…!!

மாண்டஸ் புயல் மாமல்லபுரம் அருகே முழுமையாக கரையை கடந்துவிட்டதாக வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். புயல் தாக்கம் காரணமாக உள் மாவட்டங்களில் மழை தொடரும். மாண்டஸ் புயல் இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து, பிறகு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும். மேலும், மதியம் வரை கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்றார்.

இந்நிலையில், புயல் காரணமாக தமிழகத்தில் இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அதன்படி, அண்ணா பல்கலை., சென்னை பல்கலை., இணைப்புக் கல்லூரிகளில் நடைபெறவிருந்த தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மேலும், இன்று நடக்கவிருந்த பாலிடெக்னிக் தேர்வுகள் டிசம்பர் 17-ந் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வனத்துறை சார்ந்த பணிகளுக்கு நாளை நடைபெறவிருந்த தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது. தேர்வு குறித்த தேதி பின்னர் அறிவிக்கப்படும் என கூறியுள்ளது.

Categories

Tech |