உலக கோப்பை கால்பந்து போட்டிகள் நடந்து வரும் கத்தார் நாட்டில், பிலிப்பைன்ஸின் தொழிலாளி ஒருவர் பலியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த வருடத்திற்கான FIFA உலகக்கோப்பை போட்டிகள் கத்தார் நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது. இதில், அலெக்ஸ் என்ற நபர் சவுதி அரேபிய தேசிய அணியினுடைய பயிற்சி முகாமான சீலைன் ரிசார்ட்டில் இருக்கும் வாகனம் நிறுத்தும் இடத்தில் விளக்குகளை பொருத்துவதற்கு நியமிக்கப்பட்டிருந்தார்.
அந்த தொழிலாளி நடந்து சென்ற போது திடீரென்று வளைவிலிருந்து தவறி விழுந்ததில் உயிரிழந்தார். அவர், தலைகீழாக விழுந்ததில் தலையில் பலமாக காயம் ஏற்பட்டிருக்கிறது. இந்த தகவலை உலக கோப்பையின் தலைமை நிர்வாகியான நாசர் அல் கத்தர் வெளியிட்டார். மேலும் அவர் தெரிவித்ததாவது, இந்த சம்பவத்தால் FIFA மன வருத்தமடைந்திருக்கிறது. எங்களின் எண்ணங்கள் மற்றும் அனுதாபங்கள் அவரின் குடும்பத்தினருடன் இருக்கும் என்று கூறியிருக்கிறார்.