Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கனமழை எதிரொலி… மழை நீரை அகற்ற 805 மோட்டார் பம்புகள்… தயார் நிலையில் சென்னை மாநகராட்சி..!!!

கனமழை எச்சரிக்கை எதிரொளியாக சென்னையில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றுவதற்கு 805 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் இருக்கின்றது.

வங்க கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல் சென்னைக்கு அருகே கடையை கடக்கும் என கூறப்பட்டுள்ள நிலையில் சென்னையில் கன முதல் அதிகனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி சென்னை மாநகராட்சி செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறியுள்ளதாவது, மாநகராட்சி சார்பாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றது.

அதிலும் குறிப்பாக தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேக்கம் ஏற்பட்டால் உடனடியாக வெளியேற்றுவதற்கு 805 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் இருக்கின்றது. மேலும் பொதுமக்களை தங்க வைப்பதற்கு 179 நிவாரண மையங்கள் தயார் நிலையில் இருக்கின்றது. இதைத்தொடர்ந்து புயல் கரையை கடக்கும் போது காற்றின் வேகத்தால் விழும் மரங்களை அகற்றுவதற்காக 272 மர அறுவை எந்திரங்கள் வாகனங்களில் பொருத்தப்பட்ட 2 மர அறுவை எந்திரங்கள், 6 ஹைட்ராலிக் மர அறுவை எந்திரங்கள், ஒரு பகுதிக்கு ஒரு பொக்லைன் வண்டி என 45 பொக்லைன் வாகனங்கள், 115 டிப்பர் லாரிகள் தயார் நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |