Categories
சினிமா தமிழ் சினிமா

மிகச் சிறப்பான நடிப்பை அழகாக, அளவாக…. எஸ்.ஜே சூர்யாவை பாராட்டிய பிரபல இயக்குனர்..!!!

எஸ்.ஜே சூர்யாவை பாராட்டி பிரபல இயக்குனர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

பிரபல இயக்குனரான எஸ்.ஜே சூர்யா தற்போது ஹீரோவாக நடித்து வருகின்றார். இவர் தற்போது ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் வதந்தி என்ற வெப் தொடரில் நடித்திருக்கின்றார். இந்த வெப் தொடர தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் சென்ற டிசம்பர் 2-ம் தேதி வெளியாகி இருக்கின்றது.

இது தற்போது நல்ல வரவேற்பை பெற்று வருகின்ற நிலையில் இயக்குனர் சுசீந்திரன் இதுக் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கின்றார். அதனை எஸ்.ஜே.சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இயக்குனர் சுசீந்திரன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது, சூர்யா சார் நடிப்பில் வெளியாகி உள்ள வதந்தி வெப் தொடர் மிகச் சிறப்பான நடிப்பை அளவாக அழகாக வெளிப்படுத்தி இருக்கின்றார். லைலா அவர்களும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றார்கள். படக்குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |