Categories
மாநில செய்திகள்

மாண்டஸ் புயல் எதிரொலி..! சென்னையில் இன்று 25 விமானங்கள் ரத்து…!!

சென்னைக்கு வரும் மற்றும் சென்னையில் இருந்து புறப்படும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மாண்டஸ் புயல் எதிரொலியாக சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்படும் 25 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னைக்கு தென்கிழக்கில் 260 கிலோ மீட்டரில் மாண்டஸ் புயல் நிலை கொண்டுள்ளது. இதனால் வானிலை மாறுபாடு காரணமாக சென்னையில் இருந்து கொச்சி, திருவனந்தபுரம், தூத்துக்குடி, மதுரை, மைசூர், கோழிக்கோடு விஜயவாடா, பெங்களூரு, கண்ணூர், திருச்சி, ஹூப்ளி, ஐதராபாத் செல்லக்கூடிய விமானங்கள் மற்றும் பெங்களூர் மைசூர் உள்ளிட்ட நகரங்களில் இருந்து சென்னைக்கு வரக்கூடிய விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 25 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னைக்கு மிக அருகில் புயல் நெருங்கி கொண்டுள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள வானிலை மாற்றங்கள் காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னையை நெருங்கி வர வர மணிக்கு 85 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு இருந்தது. வானம் தெளிவாக இருக்காது என்ற பட்சத்தில் விமானங்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

 

Categories

Tech |